• Jul 24 2023 - 12:42
  • 226
  • Study time : Less than one minute
இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் தொடர்பு அமைப்பு

இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் தொடர்பு அமைப்பு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
 
ஸ்வீடனில் உலக முஸ்லிம்களின் புனித நூலை மீண்டும் மீண்டும் அவமதிப்பது பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை கோருபவர்களின் உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுதியுள்ளது. அரசாங்கத்தின் ஒப்புதல் மற்றும் காவல் துறையிள் ஆதரவுடன் ஸ்டாக்ஹோமில் புனித அல் குர்ஆன் எரிக்கப்படுவது,  இவ்வாறான நவடிக்கைகளுக்கு பரவலான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பை அழகிய முறையில் எடுத்துக் காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஸ்வீடனின் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் இவ்வாறான எதிர்ப்ப நவடிக்கைகளுக்கம் அதன் தொடர்ச்சிக்கும் மிகவும் பங்கு வகிக்கின்றன.
 
ஸ்வீடன் அரசும், அதன் பாதுகாப்பு நிறுவனங்களும் காவல்துறையும்  இந்த நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அல் குர்ஆன் அவமதிப்பு ஆகியவை மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதாக கருதப்படாது என்ற உண்மையை முஸ்லிம்களின் பார்வையில் இருந்து மட்டுமல்ல, ஏனையோர்களின் பார்வையிலும் இருந்து உணர வேண்டும். மேலும் இவ்வாறான நவடிக்கைகள் ஸ்வீடன் மீதான உலகளாவிய பகமைக்கும் வெறுப்புக்கும் வழிவகுக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அவ்வரசுக்கு எதிராக நடக்கின்ற நடவடிக்கைகள் இவற்றுக்கு உதாரணமாகும்.
 
இந்நாட்டின் உத்தியோகபூர்வ ஆதரவோடு புனித அல் குர்ஆன் எரிக்கப்பட்டதை சர்வதேச இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் தொடர்பு அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வெட்கக்கேடான மற்றும் ஆபத்தான அணுகுமுறையை நிறுத்துமாறும் ஸ்வீடன் அரசாங்கத்தையும் பிற ஜரோப்பிய அராசாங்கங்களையும் உடனடியாகவும் தெளிவான நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இவ்வமைப்பு கோருகிறது.
 
ஸ்வீடன் அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறையையும், அல் குர்ஆனுக்கு எதிரான அவமதிப்பக்களையும் மற்றும் திட்டமிடப்பட்ட வெறுப்ப நடவடிக்கைகளையும் சர்வதேச அமைப்பகளின் செயலற்ற தன்மையையும் முஸ்லிம்கள் மற்றும் உலகில் உள்ள இப்ராஹீமிய மதங்களை உண்மையாக பின்பற்றுபவர்களால் பொறுத்துக் கொள்வது என்பது இனிமேல் சாத்தியமில்லை என்பது தெட்டத் தெளிவானது.
کلمبو سریلانکا

کلمبو سریلانکا

Write your comment.

Enter your text and push Enter

Font size change:

Change word spacing:

Change line height:

Change mouse type: